டெல்லியில் வேற்று மத பெண்ணை காதலித்த வாலிபர் குத்தி கொலை – காதலியின் பெற்றோர், சகோதரர் உட்பட 4 பேர் கைது

டெல்லியின் ரகுபிர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்கித் சக்சேனா (23). போட்டோ கிராபாரான அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் அவரை காதலித்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பெண்ணின் வீட்டில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த விசயம் எப்படியோ அப்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த வாலிபரை கொலை செய்துவிடுவதாக பெண் வீட்டார் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அன்கித் சக்சேனா அவர் வீட்டின் அருகில் வைத்து மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்கித் காதலித்த பெண்ணின் தாய் மற்றும் ஒரு உறவினரை சம்பவ இடத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அன்கித்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலியின் தந்தை மற்றும் 14 வயது சகோதரரையும் போலீசார் கைது செய்துனர்.

இந்த கொலையின் காரணமாக ரகுபிர் நகர் பகுதியில் பதற்றமாக சூழல் நிலவி வருவதையடுத்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply