ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. 2016-ல் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. இதற்கிடையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது. மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன.
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற ஜெயலலிதாவின் வாக்குபடி 500 மதுக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்கட்சிகள் மதுவிலக்கு பிரச்சினையை கையில் எடுக்கும்.
எனவே ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றும் வகையிலும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்கவும் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக விற்பனை குறைந்த மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா பிறந்த நாளில் (24-ந்தேதி) 500 மதுக்கடைகளும் மூடப்படும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply