22 இந்திய மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம்
மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் ஆங்கிலோ ஈஸ்டர்ன் என்ற கம்பெனிக்கு சொந்தமான கப்பலில் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலுடன் நிலை நின்று கொண்டிருந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், அந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மாயமாகிய கப்பலில் 22 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாயமானவர்களின் குடும்பத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். அவர்களின் பாதுகாப்பே முதன்மையான பணி என ஆங்கிலோ ஈஸ்டர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply