தமிழ் மொழியில் தேசியக்கீதத்துடன் இடம்பெற்ற சுதந்திர தின வைபவம்!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவம நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில், மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலத்தடியில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.காலை 8.40 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ்.தேசப்பிரிய தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர், தமிழ் மொழியில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டது.
பின்னர் பொலிஸ், இராணுவம், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றதோடு, மாவட்டத்தை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அணிவகுப்பாக மாவட்டச் செயலகம் நோக்கி இடம் பெற்றது. மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மற்றும் சர்வ மத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
மேற்படி சுதந்திர தின நிகழ்வுகளில் முப்படை அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply