அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

அரசியல் நடவடிக்கைகளின் பொருட்டு சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தமது அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர்களை அரசியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply