46 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: உத்தரபிரதேச போலி டாக்டர் கைது
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் பகுதியில் கடந்த ஏப்ரல் தொடங்கிய 10 மாதங்களில் 46 பேருக்கு அடுத்தடுத்து எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. எய்ட்ஸ் நோய்க்கு காரணமான இந்த வைரஸ் எவ்வாறு அவர்களை தாக்கியது என்று மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது.
அப்போது, அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. தற்போது வரை பங்கர்மாவ் பகுதியில் 58 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர குமார் மீது கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதன் பலனாக நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply