கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்: இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் அதிரடி
கூகுள் நிறுவனத்துக்கு 135.86 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தகவல்களுக்கு உடனே நாடுவது கூகுள் சர்ச் இன்ஜின். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே, பிரபல திருமண சேவை இணைய தளம் ஒன்று வலைதளமான கூகுள் தேடு பொறியியல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிவில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதியானது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, போட்டி கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், கூகுள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply