விரைவில் வடமாகாணத்தில் தேர்தல்: பசில் ராஜபக்ஷ
நாட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட மாகாணத்துக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதி மொழி வழங்கியுள்ளது. “புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தலை நாங்கள் நடத்துவோம்” என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம் வசரியாபுரம் பகுதியில் மீள்குடியேற்ற செயற்திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “இலங்கைக்கு உதவிசெய்வதற்காக சர்வதேசம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை” என்றார் அவர். “புலிகளின் பிடியிலிருந்து வெளியேறிய மக்களுக்கு உதவி நிறுவனங்கள் நேர்மையான முறையில் உதவிசெய்யவேண்டும். இலங்கைக்கு போலியான உதவிகளைச் செய்து சமூகங்களுக்கிடையில் முரண்பாடொன்றை ஏற்படுத்துவதற்கு சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன” என பசில் ராஜபக்ஷ கூறினார்.
எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குலைப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply