மைத்­தி­ரியின் அனு­மதி பெற்றே பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி : ஆறுமுகன்

உள்­ளூராட்சி சபை­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வு டன் இணைந்து செயற்­ப­டுவோம் என தெரி­வித்­துள்ள இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய அர­சி­யலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும் அறி­வித்­துள்­ளது.

இலங்கை தொழி­ளாலர் காங்­கிரஸ் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் பொது செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளு­ராட்சி சபை­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக மாத்­தி­ரமே நாம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி அமைத்­துள்ளோம். நுவ­ரெ­லி­யாவின் 11 சபை­களில் கூட்­டணி அமைத்து செயற்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் இந்த கூட்­ட­ணியை ஏற்றுக் கொண்­டுள்­ளனர். காரணம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நாம் ஆட்­சியில் இல்லை. ஆட்­சியில் இருந்­த­வர்கள் மக்­க­ளுக்கு கொடுத்த எந்த வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் நாம் மக்­க­ளுக்கு கொடுத்த அனைத்து வாக்­கு­று­தி­க­ளையும் நிச்­சயம் நிறை­வேற்­றுவோம். அது குறித்து மக்கள் கவ­லை­ய­டையத் தேவை­யில்லை.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் நாம் அங்­கத்­த­வ­ராக உள்ளோம். எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் எமது கூட்­டணி பற்றி அறி­விக்­கப்­பட்டு அனு­ம­தியும் பெறப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் நாம் தொடர்ச்­சி­யாக எமது மக்கள் சேவை­களை முன்­னெ­டுத்துச் செல்வோம். அதற்கு தற்­போ­துள்ள புதிய தொகுதி முறை மிக சிறப்­பான வாய்ப்­பாக அமையும். அதே வேளை போனஸ் ஆசன முறையால் தான் நாம் புரிந்­து­ணர்­வு­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இல்­லை­யெனில் எம்மால் தனித்து ஆட்சி அமைத்­தி­ருக்க முடியும்.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டும் என்று மஹிந்த தரப்­பினர் தெரி­வித்­துள்­ளனர். அவர்­க­ளது இடத்தில் இருந்து பார்க்கும் போது பெரும்­பான்மை வாக்­கு­களை பெற்ற கட்சி என்ற அடிப்­ப­டையில் அது நியா­ய­மா­ன­தாகும். எனினும் 4 வரு­டங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. இவ்­வி­டயம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தின் படியே நாம் செயற்­ப­டுவோம்.

தொடர்ச்­சி­யாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புடன் இணைந்தே செயற்­ப­டுவோம். ஏனைய எந்த கட்­சி­யிடம் இருந்து இணைந்து ஆட்சி அமைக்க யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அது தொடர்­பி­லான பரி­சீ­லனை செய்­வ­தற்கு கூட நாம் தயா­ராக இல்லை.

பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான கூட்­டணி குறித்து மக்கள் அதி­ருப்தி அடையத் தேவை­யில்லை. நாம் மக்களிடம் இது தொடர்பிலான தெளிவுபடுத்தலினை விரைவில் மேற்கொள்வோம். மக்கள் எதிர் பார்ப்பவை மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அவர்கள் எந்த கூட்டணி பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply