ஐ.தே.க தலைமைத்துவத்தில் மாற்றமில்லை நல்லாட்சி தொடர்கிறது

தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.தே.க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே, இந்த நிலைப்பாட்டுக்கு, கட்சி வந்துள்ளது.

அதன் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு, கட்சியை மறுசீரமைப்பது தொடர்பிலும், கட்சியின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும், கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தை, அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு தொடர்ந்து முன்னெடுக்கவே ஐ.தே.க ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply