‘மாத்தையா`வின் மனைவி பிள்ளைகள் இராணுவத்திடம் சரண்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.
வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த மகேந்திரராஜா 1976/77 காலப்பகுதியில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர் தரக் கல்வியை வல்வெட்டித்துறையிலுள்ள சிதம்பரா கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராக இருந்த சிறீஸ்கந்தராஜா 1984ல் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பின் அவரின் மனைவியை மாத்தையா திருமணம் செய்திருந்தார். மாத்தாயா புலிகளால் கொல்லப்பட்ட போது அவருக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையுமாக மூன்று பிள்ளைகள் இருந்தனர். மாத்தையா முன்னால் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்னத்தின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கு ஏக தலைமைத்துவம் கொடுக்கும் `கனவு மெய்ப்பட` உழைத்த புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவரான மாத்தையா அவரது அமைப்பின் ஏக தலைமையாலேயே வஞ்சிக்கப்பட்டமை புலிகளின் சரித்திரத்தில் மட்டும் காணக்கூடிய புதிய `புறநானூற்று` பக்கமாகும்.
1987ல் `வராது வந்த மாமணியான` இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்த புலிகள், வட கிழக்கு இணைந்த மாகாண சபையை செயல்பட உதவிய இந்திய அமைதி காப்புப் படையை பிறேமசாத அரசுடன் கூட்டு சேர்ந்து வெளியேற்றிய புலிகள், இந்திய உளவுத்துறைக்கு தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது பழி சுமத்திய புலிகள், இன்று `இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவோம்` எனும் தேர்தல் கால `வாய்ச் சவடால்` பேர் வழிகளை அட்டாங்க நமஸ்காரம் செய்கிறார்கள். இந்த `அதி மேதகு தேசிய` தலைவரின் `அரசியல் மதிநுட்பம்` 20 ஆண்டுகால அதரப்பழசான என்பதை சொல்ல இலங்கை அரசியலில் விசேட பாண்டித்தியம் எதுவும் தேவை இல்லை.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply