இந்த சூழ்நிலையில் நாட்டைப் பொறுப்பேற்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ஷ
இந்த நாட்டை சரிசெய்யாமல் இடைநடுவில் நாட்டைப் பொறுப்பேற்பது உசிதமானதல்லவெனவும், இந்த கூட்டணி அரசாங்கம் எஞ்சியுள்ள காலத்தை எவ்வாறு கடத்தப் போகின்றது என்பதை நாம் அவதானமாகவுள்ளோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சியாளர்கள் செயற்படும் விதம் குறித்து நாம் அவதானத்துடன் உள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி இன்று துண்டு துண்டாக உடைய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்திலுள்ள பொறுப்புக்களை ஏற்க வருமாறு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும், அவர்கள் இப்படியான நெருக்கடி மிக்க நிலையில் பொறுப்புக்களை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடன் அரசாங்கத்தை முன்னெடுக்க தீர்மானித்தால், கூட்டு எதிர்க் கட்சியின் எந்தவொரு ஆதரவும் அதற்கு கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply