நிவாரண கிராமங்கள், நலன்புரி நிலையங்களில் 200 கொட்டில்கள்

அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக நிவாரண கிராமங்கள், நலன்புரி நிலையங்களில் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வருவதாக வவுனியா வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் நேற்று தெரிவித்தார்.செட்டிக் குளத்திலுள்ள அருணாச்சலம், ஆனந்த குமார சாமி வலயம் 1, வலயம் 2, வலயம் 3 ஆகியவற்றில் 100’x16’ அளவு கொண்ட சுமார் 200 தற்காலிக கொட் டில்கள் அமைக்கப்படுவதுடன் ஒவ்வொரு வலயத்திலும் சுமார் 4500 மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் இரு நேர பாடசாலையாக இயங்க வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வலயம் மூன்றில் 60 பாடசாலைகள் அமைக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 6 தற்காலிக கொட்டில்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை செட்டிக்குளம் வலயம் இரண் டில் பாடசாலைக்கான கொட்டில்களை அமைப்பதற்கான மதிப்பீடுகளை பொறியியலாளர்கள் மேற்கொள்ளவுள்ள னர். இங்கும் 100’x16’ அளவிலான 60 தற்காலிக கொட் டில்கள் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வலயத்திலும் கற்பிக்கத் தேவையான ஆசி ரியர்கள் உள்ளனர். இதுவரையில் 500 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் ஏற்கனவே அமை க்கப்பட்டுள்ள தற்காலிக பாடசாலைகளில் பெருந்தொகை யான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக வவுனியாவுக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் எண்ணி க்கையும் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு பகுதிக்குள் வரும் அனைத்து மாணவர்க ளுக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் எதிர்வரும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றத் தகுதியுற்ற அனைத்து மாணவர்களிடமிருந்தும் விண்ணப் பங்களை ஏற்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவி த்தார்.

பெருந்தொகையான மக்கள் ஒரே நேரம் இடம்பெயர்ந்து வந்ததால் வவுனியா மாவட்டத்தில் சுமார் 20 பாடசாலைகளில் மக்களை தங்க வைக்க நேரிட்டது.

இதனால் பாடசாலையை இழந்த வவுனியா மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொட ர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply