புலிகள் பேரம் பேசும் வல்லமையை இழந்துள்ளனர் : நோர்வே
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார். சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள அப்பாவி பொதுமக்கள் குறித்தே நேர்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முழுக்கவனமும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கு நோர்வே அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஊடாக அப்பிரதேச அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply