வவுனியாவில் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவச சிகை அலங்காரம்

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஜி. குலரத்னவின் ஏற்பாட்டில், இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு இன்று முதல் இலவசமாக சிகை அலங்காரம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன்சிகேரா தெரிவித்தார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலம், காமினி மகா வித்தியாலயம் ஆகிய நலன்புரி நிலையங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்போர் சங்கத்தினால் சிகை அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோன்று காயமடைந்த நிலையில் இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் இன்று சிகை அலங்காரம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்கு வவுனியா தனியார் பேருந்து சங்கத்தினர் அனுசரணை வழங்கியுள்ளதாக இந்தப் பணிகளை ஒருங்கிணைத்த வவுனியா பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் ஜானக தெரிவித்தார்.

தமது சங்க உறுப்பினர்கள் சுமார் 18 பேர் இன்றைய ஆரம்ப தினபணிகளில் ஈடுபட்டதாகவும், ஞாயிறு தோறும் இந்த இலவச சேவை இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் முக்கியஸ்தராகிய ஸ்டீபன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply