அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து : 257 பேர் பலி என தகவல்

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் இன்று புறப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லயுஷின் இல் 76 என்ற பெயர் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்கள் தவிர பயணிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 257 பேர் பலியானதாக அந்நாட்டு ரேடியோ அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply