ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு: “அரசு எங்கள் யோசனையை கேட்டது” : ரகுராம் ராஜன்
பிரதமர் நரேந்திரமோடி 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி அதிரடியாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில், ரிசர்வ் வங்கியின் யோசனையை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருத்தும் எழுந்தது. இதுபற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து எதுவும் கூறாமல், மவுனம் காத்து வந்தார்.
இப்போது அவர் மவுனம் கலைத்து, கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்டு கென்னடி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, என்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. உள்ளபடியே, எங்களை கலந்து ஆலோசித்தனர். நாங்கள் அது நல்ல யோசனை அல்ல என்று கூறினோம்” என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்பது நன்கு திட்டமிடப்பட்ட, சிந்தித்து எடுக்கப்பட்ட, பயன் உள்ள நடவடிக்கை அல்ல. இந்த யோசனை முதலில் வந்தபோதே அரசிடம் கூறினேன். 87.5 சதவீத காகிதப்பணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறபோது, அதற்கு சமமான அளவுக்கு வேறு காகிதப்பணத்தை அச்சடித்து, புழக்கத்துக்கு விட தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்றுதான் எந்த ஒரு பெரிய பொருளாதார வல்லுனரும் சொல்வார்கள். ஆனால் அது செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply