பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு அதிபர் சிறிசேனா அறிவிப்பு
இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவும் இருந்து வருகின்றனர். மைத்ரிபால சிறிசேனா இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனால், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கே தான் காரணம் என அதிபர் சிறிசேனா கட்சியினர் குற்றம் சாட்டினர். அந்த கட்சியின் பல அமைச்சர்களும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிரதமர் ரணில் விக்மரசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்மரசிங்கே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
சிறிசேனா கட்சியை சேர்ந்த 12 அமைச்சர்கள், பிரதமருக்கு எதிராக செயல்பட்டனர். 6 அமைச்சர்கள் உள்பட 16 எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுபோட்டதால் அதிருப்தி அடைந்துள்ள ரணில் விக்ரமசிங்கே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிபர் சிறிசேனாவிடம் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்று வந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது என அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 19-ம் தேதி நடக்கவிருந்த நாடாளுமன்ற தொடர் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மே 8-ம் தேதி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply