வடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே
வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜிநோல்ட் குரே நேற்றையதினம் மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பி.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராகவும் ஊவாமாகாண பதில் ஆளுநராகவும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
1. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
2. கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
4. ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம் ( மீண்டும் இன்றைய தினம் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்)
5. மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
6. எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
7. பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply