ராகுல்காந்தி விரைவில் பிரதமர் ஆவார்: நாஞ்சில் சம்பத்

வாலாஜா காந்தி சதுக்கத்தில் இலக்கிய விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். காந்தியத்தை புரிய வைத்த ராகுல்காந்தி என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதும் எனது தந்தை ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறியதை கேட்டு நான் அகம் மகிழ்ந்தேன்.

26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டு கிடக்கும் 7 பேர் விடுதலை ஆவார்கள் என நினைத்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.

காந்திய வழியில் ராகுல்காந்தி என நான் எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். உலக நாடுகளில் 70 நாடுகள் மரணத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களை நம்நாடு பின்பற்றுகிறது.

அப்படியிருக்க இங்கிலாந்தில் மரணத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.

தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறும்போது, அவர் மகாத்மா காந்தி நிலைக்கு உயர்ந்து விட்டார் என நான் கருதுகிறேன். ராஜீவ்காந்தி இளம் வயதில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவரைப் போலவே ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply