முதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று ஆபரேசன் : பாரீஸ் டாக்டர் சாதனை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரோம் ஹமோன் (40). இவரை ‘மூன்று முக’ மனிதர் என அழைக்கின்றனர். அதற்கு காரணம் இவர் தனது சொந்த முகத்தில் 2 தடவை வேறு முக அமைப்பில் மாற்று ஆபரேசன் செய்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் ஜெரோம் ஹமோன் மரபியல் மாற்று காரணமாக ‘நியூரோபைபிரோ மெடோ சிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது முகத்தில் கட்டிகள் உருவாகி முகம் அகோரமாக மாறியது.

இதற்காக பாரீசில் உள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ யூரோப்பியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ட் லான்டியரி தலைமையிலான நிபுணர் குழுவினர் இறந்தவரின் முகத்தை தானமாக பெற்று முகம் முழுவதையும் மாற்றி ஆபரேசன் நடத்தினர். இது கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

அதே ஆண்டில் அவருக்கு ஜலதோச பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் முகமாற்று ஆபரேசனை அவரது உடல் ஏற்க மறுத்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தது.

அதைதொடர்ந்து ஆபரேசன் செய்து மாற்றப்பட்ட புதிய முகம் படிப்படியாக சீர்கேடு அடைந்தது. கடந்த நவம்பர் மாதம் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது.

எனவே, ஜெரோமின் புதிய முகத்தை டாக்டர் லான்டியரி முற்றிலும் அகற்றி விட்டார். எனவே, ஜெரோம் கடந்த 5 மாதங்களாக முகம் இன்றி இருந்தார். அவருக்கு கண் இமைகள், காதுகள் மற்றும் தோல் இல்லை. அவரால் சாப்பிடவோ, பேசவோ முடியாத நிலை இருந்தது.

தனது உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்தார். தலையை லேசாகவே அசைக்க முடிந்தது. அவரால் எழுத கூட முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு முகமாற்று ஆபரேசன் செய்ய டாக்டர் திட்டமிட்டார். அதற்காக முகதானம் பெற முயற்சிகள் நடைபெற்றன.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தவரின் முகம் தானமாக பெறப்பட்டு அதன் மூலம் முகமாற்று ஆபரேசன் நடைபெற்றது. தற்போது அதை அவரது மண்டை ஓடு, தோல் ஏற்றுக் கொண்டது. அவர் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார். இதன் மூலம் ஒருவருக்கு 2-வது தடவையும் முகமாற்று ஆபரேசன் செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply