சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை உறுதி : கெஹெலிய ரம்புக்வெல
_எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நிச்சயமாக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவரும். சில தினங்களில் கூட வுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு இது குறித்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே காணப்படுகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நிச்சயமாக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவரும். சில தினங்களில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு இது குறித்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. புதுவருடத்தின் பின்னர் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு இன்னும் கூடவில்லை.
சில தினங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூடி இது தொடர்பில் முடிவை எடுக்கவுள்ளது. ஆனால் நம்பிக்கையில்லா பி்ரேரணை கொண்டுவரப்படுவது உறுதியாகிவிட்டது. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும்.
காரணம் அவர் எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே காணப்படுகின்றார். எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவேண்டும்.
தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார் என்று சம்பந்தனும் அறிவித்துள்ளார். எனவே அதனை கொண்டுவரலாம். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கயைில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் அதனால் அரசாங்கத்துக்குள் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதுவே எமக்கு கிடைத்த வெற்றி என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply