அமெரிக்காவில் சிறை கைதிகள் உணவை திருடி விற்ற ஊழியருக்கு 50 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவில் டெக்காசில் சிறுவர் சீர்திருத்த ஜெயில் உள்ளது. அங்கு அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தில் இருந்து வாகனம் மூலம் எடுத்து வரப்படும் ‘பாஜி பாஸ்’ என்ற உணவு பொருள் திருடப்பட்டு வந்தது. பாஜிடாஸ் என்பது மெக்சிகோ மக்களின் பாரம்பரிய உணவு. மாட்டு இறைச்சி அல்லது சிக்கனுடன் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உணவு ரூ.8 கோடி அளவில் திருடி வெளியில் விற்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறையில் பணிபுரியும் ஊழியர் கில்பெர்டோ எஸ்காமில்லா (53) என்பவர் கையும் களவுமாக சிக்கினார். அதை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கில்பெர்டோ எஸ்காமில்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply