துருக்கி நிலநடுக்கத்தில் 39 பேர் காயம்
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அடியமன் மாகாணத்தில் (இந்திய நேரப்படி) இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் சில வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்குமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் இடிந்து நாசமடைந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 39 பேரில் 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாகாணத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply