சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்
_சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.__
இவருக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது மந்திரியாக செயல்படுவார்.
இவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து வகிக்கின்றனர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சா வளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply