புதிய பிரதி அமைச்சர்கள் 10 பேர் நியமனம்

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இதற்கமைய 10 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறித்த பிரதி அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

பிரதியமைச்சர்கள் விபரம்:

01. அமீர் அலி : மீன்பிடி மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர்

02. துனேஷ் கன்காந்த : காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

03. ரஞ்சன் ராமநாயக்க : சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

04. கருணாரத்ன பரணவிதான : விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர்

05. சாரதி துஷ்மந்த : நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

06. பாலித குமார தெவவரப்பெரும : நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்

07. மானுஷ நாணயக்கார : தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

08. முத்து சிவிங்கிங்கம் : உள்துறை மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

09. அலி ஸாஹிர் மௌலானா : தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்

10. எச்.எம்.எம். ஹரீஸ் : பொது நிர்வாகம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply