நவீன தொழில்நுட்பங்களை இலங்கையின் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை உள்ளுர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக ; அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.இதற்காக ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை விளக்கும் பொருட்டு நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

உள்நாட்டு திரைப்படத்துறையை மேம்படுத்த திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தை செயற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்ப அமைச்சர் , உள்நாட்டு திரைப்படத் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது குழுவின் தலைவராக திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் சமகாலத் தலைவர் சித்தேந்ர சேனாரத்ன செயற்படுகிறார். திரைப்படக்கூட்டுத்தாபனச் சட்டத்தை முறையாக அமுலாக்க வேண்டும் எனவும், அது குறித்து ஆலோசனை வழங்கியிருப்பதாகவம் அமைச்சர் கூறினார்.

திரையரங்குகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமும் அமுலாக உள்ளது என்றம் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply