சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் சிறுவர் பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மீதான கரிசனை குறைவடையும்போது, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply