புதுமாத்தளன் பகுதி மக்களுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று  கப்பலில் மருந்து வகைகள் அனுப்பப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.இதேவேளை வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக 3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன நேற்று வவுனியாவுக்கு அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.

புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியாவுக்கு வந்துள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகள் அளிப்பதற்காக 3 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்ப உள்ளதாக கூறிய அவர் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லோறிகளில் வவுனியாவுக்கு மருந்து வகைகள் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் கூடுதலான பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருகை தந்ததையடுத்து கடந்த தினங்களில் கூடுதலான மருந்து வகைகள் அங்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply