ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply