சிட்னியில் உண்ணா விரதம் இருந்த மூவர் கைது; ரொறன்டோ `அடங்காப்பற்று` கைவிடப்பட்டது

அவுஸ்ரேலியாவில் சிட்னி – பரமற்ர பகுதியில் கடந்த இரு தினங்களாக சாகும் வரை உண்ணா விதரம் இருந்து வந்த வேந்தன், தீபன் மற்றும் சுதா என்பவர்கள் சிட்னி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி கைது செய்யப்பட்ட மூவரும் உடனடி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பரமற்ர பகுதியில் உள்ள பொது மருத்துவ மனைக்கு சிட்னி பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதேவேளை இன்று ரொரண்டோவில் நடக்கவிருந்த `அடங்காப்பற்று` கைவிடப்பட்டதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். பல தரப்பினரது அவசர வேண்டு கோள்களுக்கு இணங்க ரொறன்ரோ நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (மே. 05) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply