திட்டமிட்டபடி 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் : டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

இந்நிலையில், இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:-

நாங்கள் ஜூன் 12-ம் தேதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply