சோமாலியா நாட்டின் சிறிய நகரை அல் ஷபாப் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் அல் ஷபாப் பயங்கரவாதிகள் தலைநகர் மொகடிஷுவில் இருந்து வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முக்கோக்ரி என்னும் சிறிய நகரத்தை கைப்பற்ற அரசுப் படையினர் மீது ஆவேச தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதலில் 47 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எஞ்சியிருந்த படையினர் உயிரிக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதைதொடர்ந்து, முக்கோக்ரி நகரம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அல் ஷபாப் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply