பாரிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்: எம்.ஏ.சுமந்திரன்

வடமராட்சி கிழக்கில் தங்கியுள்ள தென்னிபகுதி மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளியேற்றவேண்டும். அவ்வாறு பதில் இல்லையேல் அடுத்த நாள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த மக்களைத் தயாராகுமாறு நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு ? மருதங்கேணி பகுதியில் அடாத்தாக தங்கியுள்ள சுமார் ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்றுஇன்று மருதங்கேணி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ?மருதங்கேணியில் தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டும் என மத்திய கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படும்.

அதற்கமைய எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் தகுந்த பதில் அமைச்சரிடமிருந்து கிடைக்கவில்லையென்றால் அடுத்த நாளான 6 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டம் ஒன்றுக்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும். அந்த போராட்டத்தில் நாமும் கலந்து கொள்வோம்.

அதற்கும் தகுந்த பதில் உடனடியாக கிடைக்கவில்லையாயின் அடுத்தகட்டமாக மிகப்பெரியளவில் மக்களை ஒன்று திரட்டி அரசியல்வாதிகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் திணைக்களத்தை முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவோம்? என்று தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply