புகையிரதத்தில் குழந்தையை பிரசவித்த தாய் – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் சம்பவம்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற நகர்சேர் கடுகதி புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் இன்று அதிகாலை ரயில் பெட்டியில் வைத்து குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் ஹபரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; புகையிரதத்தில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் குழந்தையை பிரசவிக்கும் நிலையில் உள்ளதாக புகையிரத அதிகாரிகள் ஹபரனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக செயல்பட்ட ஹபரனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஹபரனை வைத்தியசாலைக்கு இது தொடர்பில் தெரிவித்து குடும்ப சுகாதார அதிகாரி உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுடன் குறித்த புகையிரதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஹபரனை புகையிரத நிலையத்துக்கு விரைந்துள்ளனர்.
அவர்கள் அங்கு செல்லும் போது குறித்த தாய் குழந்தையை பிரசவித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குடும்ப சுகாதார அதிகாரியால் ரயில் பெட்டியினுள்ளேயே வைத்து தேவையான அடிப்படை சுகாதார சேவைகளை மேற்கொண்டு தாயையும் குழந்தையையும் ஹபரனை வைத்தியசாலைக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply