விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை போர்நிறுத்தம் இல்லை: கோதபாய

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை அவர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதில்லையென்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூறியுள்ளது. 
 
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விடுதலைப் புலிகளே விலகிக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகக விலகிக் கொண்டாலும், 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விடுதலைப் புலிகளே விலகிக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனவும் கோதபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தயார் என அண்மையில் கூறியிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ஆயினும், இலங்கை அரசாங்கம் கூறுவதைப் போன்று ஆயுதங்களைக் கீழே வைக்கமுடியாது எனக் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் இந்த அறிவித்தலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply