சகல ஊடக நிறுவனங்களும் ஒன்றிணைய வேண்டும்: ரொஷான் சந்திரகுப்த
சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மாத்திரமன்றி சகல ஊடக நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கல்விமான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவறான மற்றும் போலியான விடயங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தகவல் உலக நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.
எனவே பாரம்பரிய ஊடகங்கள் மாத்திரமன்றி சமூக ஊடகங்களும் தகவல்களை சரியாக கையாள்வது அவசியம்.
இதற்கு சிறப்பான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கல்விமான்கள் சுட்டிக்காட்டினர். பாதுகாப்பு அமைச்சில்இடம்பெற்ற கருத்தரங்கில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஊடகமும் ஜனநாயகமும் போலித் தகவல்கள் தேசிய பாதுகாப்பின் மீது செலுத்தும் தாக்கம் என்ற தொனிபொருளில் கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் உரையாற்றிய பேராசிரியர் ரொஹன் சமரஜீவ தகவல்களை திரிவுபடுத்தி போலித் தகவல்களை வெளியிடும் போக்கை இலங்கை ஊடகங்களில் பரவலாக காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
ஒருவர் இணையத்தில் தவறான தகவல்களை தரவேற்றுகையில் அந்த நபரை இனங்காணக் கூடிய தொழில்நுட்ப முறைகள் உள்ளதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply