பரப்புரை போதாமையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம்:எம்.ஏ.சுமந்திரன்

நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல்கள் மக்களுக்கு சென்றடையாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றைய தேர்தலை விடவும் வித்தியாசமானது. அதில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அதிகமான கட்சிகள் போட்டியிட்ட தேர்தல். அதை மற்றைய தேர்தல்களோடு ஒப்பிட முடியாது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறு இருக்கின்ற வரையில் நாம் பலருடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலையுள்ளது. பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் எதிர்ப்புக் காட்டவேண்டிய தேவையும் இருக்கின்றது.

இந்நிலையில், எமது செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடம் சரியான தகவல் சென்றடையாததாலேயே இந்த சரிவு ஏற்பட்டது.

அத்துடன், அபிவிருத்திக்கென மாவட்ட செயலகங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டாக கொடுக்கப்பட்டதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரசாரமும் இதற்குக் காரணமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply