இலங்கை வருமாறு ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீ மூனை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்திருக்கும் அப்பாவிப் பொதுமக்கள் அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களை ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் தாமே நேரில் சென்று பார்வையிட வேண்டுமெனக் கோரியே ஜனாதிபதி அவரை இலங்கை வருமாறு அழைத்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம்  மாலை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.இத்தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தங் களது இலங் கைக் கான நேரடி விஜய த்தின் போதே பாது காப்பு வலய த்தினுள் தமிழ் சிவிலி யன்கள் புலி களின் ஆதிக் கத்துக்குள் எவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறி த்த சரியான மதிப்பீட்டை உங்களால் பெற முடியு மெனவும் செயலாளர் நாயகத்திடம் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம், இடம்பெயர்ந்து ள்ளோர் தங்கியிருக்கம் தற்காலிக நிவாரணக் கிராமங்க ளில் ஐக்கியநாடுகள் சபை அதன் தன்னார்வ அமைப்பு கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயற்படும் விதத்தை நன்கு புரிந்துகொள்ள முடியு மெனவும் ஜனாதிபதி ஐ. நா. செயலாளர் நாயகத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனே ஏற்படுத்தியிருந்தார்.  அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அலரிமாளிகை வந்திருந்த பிரிட்டிஷ் பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவிடம் உரையாடிய ஜனாதிபதி, புலிகளால் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான பொய்ப் பிரசாரங்களை நம்பிவிட வேண்டாமென்றும் உண்மை நிலவரங்களை அறிந்துகொள்வதற்காக இடம்பெயர்ந்தோர் தற்காலிகமாக தங்கியிருக்கும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போதுதான் புலிகள் தம் இலக்கை அடைவதற்காக மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் குறித்த சரியான விளக்கம் புலப்படுமெனவும் ஜனாதிபதி பிரித்தானியப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply