கூட்டமைப்பு எம்.பிகளுக்கு விடுமுறை வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: தினேஷ்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் விடுமுறை வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிவருமென்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு மூன்று மாத காலம் விடுமுறை வழங்குவதற்கான பிரேரணை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் எம்.பியின் சார்பில் சொலமன் சிறில் எம். பி. விடுமுறை விண்ணப்பத்தை சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் தினேஷ், ‘கூட்டமைப்பு எம்.பிக்கள் இங்கு விடுமுறை எடுத்துக்கொண்டு போய், வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு எதிராகவும், சத்திய உரைக்கு எதிராகவும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் செயற்படுவோருக்கு நாம் இன்னமும் விடுமுறையை அங்கீகரிக்க வேண்டுமா? சிந்திக்க வேண்டும். என்று அமைச்சர் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா, ‘நீங்கள் இந்த விடயத்தை ஏற்கனவே குறப்பிட்டிருக்க வேண்டும். எதிரணி உறுப்பினரின் பிரச்சினை என்பதால் இதனைக் கூறுகிறேன்.
அவருக்கு (சிவாஜிக்கு) எதிராக சட்டப்படியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையே! எனவே இப்போதைக்கு விடுமுறையை அங்கீகரிப்போம்’ என்றார். இதற்கு உடன்பட்ட அமைச்சர் தினேஷ், உறுப்பினர்களின் சிறப்பு உரிமையைப் பறிக்குமாறு நான் சொல்லவில்லை.
எதிர்காலத்தில் இதுபற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறேன்’ என்றார். அதற்கமைய சிவாஜிலிங்கம் எம்.பிக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
அதேநேரம், கனகரட்ணம் எம்.பியின் விடுமுறை விண்ணப்பத்தை, துரை ரெட்ணசிங்கம் எம்.பி. சமர்ப்பிக்க சபை அங்கீகரித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply