சிங்கராஜ வன யானைகள் தங்குவதற்கு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க திட்டம் :அமைச்சர் சரத் பொன்சேகா
உலக பாரம்பரிய இடமாக இருக்கும் பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்தில் எஞ்சியிருக்கின்ற இரண்டு காட்டு யானைகளையும் தங்க வைப்பதற்கான நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு யானைகளுக்கும் பொருத்தமான சூழலுடனான கலவான, தொல்கந்த கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பாருகல பிரதேசத்தில் இருக்கின்ற 36 ஏக்கர் காணியை கையகப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் உயிரிழப்புக்கள் மற்றும் செத்து இழப்பு உட்பட யானைகளின் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply