உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா
_உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.__
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply