சிறையில் தொலைபேசி வியாபாரம், ஒரு அழைப்புக்கு 2 ஆயிரம் ரூபா : DIG லத்தீப்
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000 ரூபா வீதம் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் இவ்வாறு அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி அந்த மாதத்தில் 360 அழைப்புக்கள் உள்வந்துள்ளன. அழைப்பொன்றுக்கு 2,000 ரூபா வீதம் அறவிடப்படுகின்றமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply