ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், மரியம் நவாஸ் அடியாலா சிறையில் அடைப்பு

_பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, லண்டனில் இருந்து திரும்பி வந்த நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை நேற்று இரவு லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.__

 

நவாஸ் ஷரீப் வருகையை அறிந்த அவரது கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் 50-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை ராவல்பிண்டிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை அங்குள்ள அடியாலா சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply