பாக். தலிபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 ஆனது – தேசிய துக்க தினம் இன்று அனுசரிப்பு
_பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25–ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.__
இதற்கிடையே, மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நேற்று முன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் அவாமி கட்சி வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட 33 பேர் ப்லியானதாக முதலில் தகவல் வெளியானது. தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட போது பலி எண்ணிக்கை 128 ஆனது.
இந்நிலையில், மஸ்தாங் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply