என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது : தெரேசா மே மிரட்டல்
_ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.__
டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரேசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரேசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா எதிர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது”என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply