மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி
_மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி காப்பு இயக்கம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர்.__
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், அங்கிருந்த ஒரு லாரி மற்றும் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply