புதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிப்புக்கு மேலும் இரண்டு வாரம்

புதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டுள்ளது.புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் விஷேட சபைக்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழுவால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு நேற்றைய தினம் கூடியிருந்த நிலையில், புதிய அரசியல் யாப்பு தயாரிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று விஷேட சபை கூறியுள்ளது.

அதன்படி இரண்டு வார கால அவகாசம் வழங்குவதற்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.விஷேட சபையால் புதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply