புதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் பதில் அளித்தார். இது அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு “ஒரு வார்த்தை மாறிவிட்டது” என்றார். அமெரிக்க தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ரஷியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உண்மையான எதிரிகளை தவிர, போலி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை தவிர, மற்றவர்களுக்கு அந்த பேச்சுவார்த்தை பெரும் வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
2-வது பேச்சு வார்த்தையில் பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் சக் ஷூம்மர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஹெல்சின்கியில் நடந்த 2 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி நாம் அறியும் முன்பாக புதினும், டிரம்பும் சந்தித்து பேசக்கூடாது என்றார். டிரம்புக்கு அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குனர் பான் கோட்சு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply