அரசு கம்ப்யூட்டரில் சிங்கப்பூர் பிரதமரின் உடல் நலம் குறித்த தகவல்கள் திருட்டு

சிங்கப்பூர் சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘சிங்கப்பூர் மக்களின் உடல் நலம் குறித்த தகவல்கள் அரசு கம்ப்யூட்டரில் திருடப்பட்டுள்ளது.’’15 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு போய் இருக்கிறது. அவற்றில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் உடல் நலம் குறித்த தகவல்களும் அடங்கும்.

மிகவும் திட்டமிட்டு நிதானமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தடயவியல் நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது திட்டமிட்டு பொறுமையாக ஆலோசித்து நடத்தப்பட்ட தகவல் திருட்டு ஆகும். இதை சாதாரணமானவர்கள் செய்ய முடியாது. இதற்கென நிபுணத்துவம் பெற்றவர்களால் தான் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 27-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரையிலான தகவல்கள் திருட்டு போயுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் 850 ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சக ஊழியர்கள் குறித்த தகவல்கள் திருடப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply